Alaioli
கோல சிலாங்கூர் செரி பிரிஸ்தானா குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள்

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர் மே 24-  இங்கு கோல சிலாங்கூர் செரி பிரிஸ்தானா குடியிருப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையிருப்பில் இருந்த மாநில அரசின் நிவாரணப் பொருட்களை அதன் பிரதிநிதிகளுடன் நேரில் சென்று ஒப்படைத்ததுடன், தீயின் காரணமாக முக்கிய உடைமைகளை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அதைப் பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து செயல்படுத்தவிருப்பதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மேலும், மக்கள் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கைரூல் நிஷாம் ஜமில் தேவையான முன்னேற்பாடு களை செய்துள்ளதாக அவர் கூறினார். 


தீயில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாம் ஆறுதல் கூறியதுடன், மாநில அரசின் நிவாரண உதவிகள் விரைந்து கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளுடன் தாம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக புஷ்பா ராஜன் அலை ஒளியிடம் கூறினார்.


கோல சிலாங்கூர் மாவட்ட தீயணைப்புப் படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News