Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், மே 25 - வாழ்வாதாரம் குறைந்து சிரமத்தை எதிர் நோக்கும் பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருந்து வரும் இந்திய குடும்ப உறுப்பினர்களின் நடப்பு நிலவரங்களைக் கேட்டறியும் சிலாங்கூர் மாநில அரசின் வறுமை ஒழிப்புத் திட்ட நடவடிக்கைக் குழு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சமூகத் தலைவர்கள் வாயிலாக பக்குல் மாக்கான் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றி தேவைப்படும் உதவி நிதியை முன்னெடுத்து அவர்கள் கண்ணீரைத் துடைக்கும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.
இங்கு, தெலுக் பங்லீமா காராங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கொண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.

மாநில அரசின் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக இவ்வட்டாரத்தில் செயல்படும் அரசு சேவையாளர்கள், சிரமத்தை எதிர் நோக்கி வரும் மனிதர்களின் விவரங்களைச் சேகரிப்பதுடன் தமது கவனத்திற்கும் தெரிவிப்பதோடு, தேவைப்படும் உதவிகளை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவர் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு கூறினார்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிஜங்காங் இந்தியர் சமூகத் தலைவர் முருகன் குணசேகரன் விடுத்திருந்த அழைப்பின் பேரில் கலந்து கொண்ட பாப்பா ராய்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பங்குல் மாக்கான் உணவுப் பொருட்களை எடுத்து வழங்கினார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல், பந்திங் இந்தியர் சமூகத் தலைவர் சாமிதுரை, பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், கோலலங்காட் ம இகா தொகுதி த் தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.-Alaiolinews

மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor