Alaioli
கிள்ளான் மருத்துவமனை குழந்தை நல பல் மருத்துவ இலாகா உயர்நிலை அதிகாரியாக டாக்டர் சுவுலம்மா@பவானி நியமனம்

எஸ்.எஸ்.மணிமாறன். 

கிள்ளான் ஜூன் 7  கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனை குழந்தை நல பல் மருத்துவ இலாகா உயர்நிலை அதிகாரியாக டாக்டர் சுவுலம்மா @ பவானி நியமனம் பெற்றுள்ளார். மாநில சுகாதார இலாகா இந்த நியமனத்தை செய்ததாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். பல் மருத்துவத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற டாக்டர் சுவுலம்மா என்ற பவானி, மனிதரின் அன்றாட பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பற்கள் வலுவிழந்து போனால் அவர்கள் பேசும் போது சொல்லும் வலுவிழந்து போகக் கூடும் என்பதால், அவர்கள் பல்லை அடிக்கொரு தடவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று  ஆலோசனை கூறினார் .

Leave a Comment
Trending News