Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 15 - கடந்த வாரத்தில் இங்கு தெலுக் பங்லீமா காராங்கில் ஒரு உணவகத்தில் ஏற்கனவே சாப்பிட்ட கடனை நிலுவையில் வைத்திருந்த பாக்கியை கடைச் சிப்பந்தி கேட்ட போது, கடனுக்கு உணவகத்தில் சாப்பிட்டு வந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஆவேசத்துடன் கையில் ஏந்திய இறைச்சி வெட்டும் கத்தியால் அந்நபரை தாக்கும் முயற்சியில் மிரட்டியதைத் தொடர்ந்து உணவகத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
அப்போது உணவகத்தில் இருந்த சிலர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்து அங்கு விரைந்த போலீஸ்காரர் ஒருவரை, கடனுக்குச் சாப்பிட்டவர் கத்தியைக் கொண்டு ஓட ஓட விரட்டினார்.
எனினும், சம்பவத்தின் போது மற்ற காவல் துறையினர் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு அழுத்திப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நான்கு தினங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞர் நேற்று காலையில் இங்கு தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்நபருக்கு 9,100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதே வேளையில், அந்நபர் ஏற்கனவே செய்திருந்த 3 குற்றங்கள் பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட விருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.- Alaiolinews
கோலாலம்பூர்
வரும் 2030 க்குள் ' வாசிக்கும் நாடாக' மலேசியா உருவாகும்.
சிலாங்கூர்
ஜெஞ்ஜாரோம் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடைவிடாது பக்தர்கள் பாராயணம் செய்து சாதனை-பாப்பா ராய்டு பாராட்டு
கோலாலம்பூர்
Seorang pegawai, dua anggota polis ditahan positif dadah di pusat hiburan di Ipoh - Bukit Aman
ஜொகூர்
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” – சரஸ்வதி விளக்கம்
கால்பந்து
Red Deviils hampir menamatan badi dua musim untuk mara ke Liga Juara-Juara musim depan
கோலாலம்பூர்
BN kekalkan formula agihan kerusi untuk hadapi PRU, PRN akan datang - Datuk Seri Dr.Ahmad Zahid Hamidi
சிலாங்கூர்
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப மாது தமிழ்ச் செல்விக்கு பாப்பா ராய்டு கருணைமிக்க உதவி
கோலாலம்பூர்
Pelajar sekolah menengah di Indonesia dikecam tunjuk isyarat jari tengah kepada guru