Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
தஞ்சோங் சிப்பாட், ஏப்ரல் 17 - இங்கு, தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப் பள்ளி சீன மாணவியான 17 வயது நிரம்பிய கோக் யு தீ என்பவர், சமூகச் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவரான இவர் , சுன் தியான் கோங் சீன ஆலயத்தில் தனது ஓய்வு நேரத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் இவர் ஆலயத்தின் சுற்றுப் புறத்தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில் சுமார் ஆயிரம் கிலோ பாரமுடைய பலகைத் தூண் ஒன்று எதிர் பாராமல் மாணவி மீது சாய்ந்து அவரது உயிரைப் பறித்தது.
இந்த அசம்பாவிதத்தை அறிந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தஞ்சோங் சிப்பாட்டில் வசித்து வரும் இறந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் மரண சகாய நிதியை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிர் நீத்த சீன மாணவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் ஒன்று கூடி கண்ணீரில் இறுதி வழி பயணம் அனுப்பி வைத்தனர்.-Alaiolinews


கோலாலம்பூர்
வரும் 2030 க்குள் ' வாசிக்கும் நாடாக' மலேசியா உருவாகும்.
சிலாங்கூர்
ஜெஞ்ஜாரோம் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடைவிடாது பக்தர்கள் பாராயணம் செய்து சாதனை-பாப்பா ராய்டு பாராட்டு
கோலாலம்பூர்
Seorang pegawai, dua anggota polis ditahan positif dadah di pusat hiburan di Ipoh - Bukit Aman
ஜொகூர்
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” – சரஸ்வதி விளக்கம்
கால்பந்து
Red Deviils hampir menamatan badi dua musim untuk mara ke Liga Juara-Juara musim depan
கோலாலம்பூர்
BN kekalkan formula agihan kerusi untuk hadapi PRU, PRN akan datang - Datuk Seri Dr.Ahmad Zahid Hamidi
சிலாங்கூர்
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப மாது தமிழ்ச் செல்விக்கு பாப்பா ராய்டு கருணைமிக்க உதவி
கோலாலம்பூர்
Pelajar sekolah menengah di Indonesia dikecam tunjuk isyarat jari tengah kepada guru