Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம். மே 12 சிலாங்கூர் மாநில அளவில் செயல்படும் இந்து வழிப்பாட்டுத் தலங்கள் தற்போது எதிர் நோக்கி வரும் பல்வேறுப் பிரச்சினைகளுக்கு தீர்க்கமாக ஆய்வு செய்யப்பட்டு அதற்கான செயல் திட்டங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து தொடர்ந்து படிப்படியாக தீர்வு காண்பதற்கான தீவிர பணிகளில் தாம் கவனம் செலுத்தி வருவதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் நான்காவது மாடியில் அமைந்துள்ள தமது அலுவலக சிறப்பு கூட்ட அறையில் வழிப் பாட்டுத் தலங்களின் நிர்வாகக் குழுவினருடன் நடத்தப் பட்ட ஒரு நேரடிச் சந்திப்பில், ஆலய நிர்வாகத்தினர் தற்போது எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப் பட வேண்டும் என்ற ஆலோசனைகளை கருத்துகளை தாம் முன் வைத்து இந்தச் சந்திப்புக் கூட்டத்தை வழி நடத்தியதாக அவர் அலை ஒளியிடம் கூறினார்.
பத்து கேவ்ஸ், அருள் மிகு ஸ்ரீ தேவ ஸ்ரீ அய்யப்பசாமி ஆலயம், கிள்ளான், அருள் மிகு ஸ்ரீ ஆதி சக்தி ராஜ காளியம்மன் ஆலயம், போர்ட் கிள்ளான் டெப்போ அருள் மிகு ஸ்ரீ தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஆகியவற்றின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பாப்பா ராய்டு வழி நடத்திய இந்த முக்கியமான கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.-Alaiolinews
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor