Alaioli
கோகி கருணாநிதி
ஜோகூர் பாரு, மே 12 – “முதியோர்களைப் பராமரிப்பது ஒரு பொறுப்பு மட்டும் அல்ல; அது மனிதநேயத்தின் வெளிப்பாடு,” என்று மேடம் அன்னா சமூகநல சங்கத்தின் நிர்வாகியான ஆனந்தி நடராஜூ தெரிவித்தார்.
உலு திராமில் இயங்கி வரும் இந்த பராமரிப்பு இல்லம், குடும்ப ஆதரவு இன்றி வாழும் முதியோர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் கொண்டவர்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.

“அன்னா” என்ற பெயரால் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆனந்தி நடராஜூ, தொழில்முறை துறையில் பணியாற்றிய அனுபவம் இருந்தபோதிலும், சமூக சேவையின் மீதான ஈர்ப்பால் இந்த சேவையைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
தற்போது அந்த இல்லத்தில் 18 பேர் தங்கி வருவதாகவும், அவர்களில் பலர் பக்கவாதம், நீரிழிவு, உடல் இயலாமை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். சிலர் முழுமையாக ஆதரவற்ற நிலையில் இருப்பதால், அவர்களை குடும்ப உறுப்பினர்களைப் போலவே கவனித்து வருவதாகவும் சொன்னார்.
இந்த இல்லம் தொண்டு அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், பராமரிப்பு முறைகள் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகத் தனித்த நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாக மேடம் அன்னா விளக்கினார். முழுமையாகக் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்களுக்காகத் தனியாகப் பதிவு செய்யப்பட்ட சேவை மையமும் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இங்கு தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் எந்த கட்டணமும் செலுத்தாமல் வசித்து வருவதாகவும், பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில் தங்கள் பெற்றோர்களைக் கவனிக்க முடியாமல் இந்த இல்லத்தின் உதவியை நாடுவதாகவும் கூறினார்.
இந்த இல்லத்திற்குப் பல தரப்பிலிருந்து நன்கொடைகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்த அவர், சமூக நலத்துறையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகக் கூறினார். சில நேரங்களில் சமூக நலத்துறையிலிருந்தே முதியோர்களைப் பராமரிப்பதற்காக இங்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தின் மூலம் சில உதவிகள் கிடைத்தாலும், நான் மேற்கொள்ளும் செலவுகளும் அர்ப்பணிப்பும் அதைவிட அதிகம். இவர்கள் இங்கே தங்கியிருப்பவர்கள் அல்ல; என் சொந்த குடும்பம்,” என்று மேடம் அன்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அங்குத் தங்கி வரும் முதியோர்களும், “அன்னா எங்களை அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். இங்கே எங்களுக்கு குடும்ப உணர்வு கிடைக்கிறது,” என்று மனமகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், முதியோர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் பகிரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த இல்லத்திற்கு ஆதரவு வழங்க விரும்பும் பொதுமக்கள் No.22, Jalan Intan, Taman Ros, Gunung Emas, Ulu Tiram என்ற முகவரிக்கு நேரில் சென்று உதவலாம் என மேடம் அன்னா கேட்டுக் கொண்டார்.-Alaiolinews

மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor