Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் மே 15. கோலலங்காட் மாவட்ட ரீதியில் இருக்கும் ஆரோக்கியம் குறைந்தோர், உடல் நலிந்தோர் சிலாங்கூர் மாநில அரசின் சாரிங்கான் கெசிஹாத்தான் பெர்சூமா இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு நேர்த்தியான மருத்துவர்கள் மேற்கொள்ளும் பரிசோதனையில் பங்கேற்க வரும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 16.5.2026 சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை பந்திங் தெலுக் டத்தோ டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற விருக்கும் மருத்துவ முகாமில் வட்டார இளையோர் முதல் முதியோரும் வருகை தந்து இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நீரிழிவு, சிறுநீரகம், புற்று நோய், இரத்த அழுத்தப் பரிசோதனை, கண் காது பல் பரிசோதனை என பல்வேறு பரிசோதனை நடவடிக்கைகள் இந்த மருத்துவ முகாமில் இடம் பெற விருப்பதால் வார இறுதி நாளான சனிக்கிழமையன்று தங்களது நேரத்தை சற்றே ஒதுக்கி மருத்துவ முகாமில் வந்து கலந்து கொள்ளும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
மாநில அரசின் பொது சுகாதாரம் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் புவான் ஜாமாலியா ஜாமாலுடின் சிறப்பு அழைப்பாளராக மருத்துவ முகாமில் பங்கேற்க வருகிறார் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.-Alaiolinews
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor