Alaioli
தஷ்மிக்கா தியாகு
மஞ்சோங், மே 17- சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கமும், ஸ்ரீ ஸ்வர்ணா ஃபைன் ஆர்ட்ஸும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் அன்னையர் தின சிறப்பு நடைப் பயணம் நிகழ்ச்சி இன்று காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அன்னையரின் அன்பு, தியாகம் அர்ப்பணிப்பு ஆகியவற்றை போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.

அன்னையர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அன்னையரின் அன்புக்கும், வலிமைக்கும், தியாகத்திற்குமான காணிக்கை என்ற உணர்வோடு நடைபெற்ற இந்த நடைபயணத்தில் ஏறத்தாழ 90க்கும் மேற்பட்ட அன்னையர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.
குடும்பம் என்ற கோவிலின் உயிர்த்தெய்வமாக வாழும் அன்னையரை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சி, அன்பும் ஒற்றுமையும் நிறைந்த ஒரு நினைவாக பங்கேற்றோரின் மனதில் நிலைத்தது.
சங்க வளாகத்தின் அருகாமையில் அமைந்துள்ள வீடமைப்புப் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை தாய்மார்கள் நடைப் பயணத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைவரும் சேலை அணிந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றி பங்கேற்றது நிகழ்ச்சிக்கு தனிச்சிறப்பாக அமைந்தது.
குறிப்பாக மலாய் இனத்தைச் சேர்ந்த 10 தாய்மார்களும் இந்திய பாரம்பரிய உடையான சேலையில் கலந்துகொண்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இது பல்லின மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம், கலாச்சாரம், மாரியாதை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்பும் ஒற்றுமையும் கலந்த இந்த அன்னையர் தின நடைப்பயணம் பங்கேற்ற அனைவரின் மனதிலும் இனிய நினைவாக பதிந்தது.
சித்தியவான் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் கோவிந்தசாமி, கூறுகையில்,

ஒரு தாய் என்பவர் அதிகாலை முதல் இரவு வரை குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் உயிர். அவர்களின் அன்பும் அர்ப்பணிப்பும் அளவிட முடியாதது. தாய்மார்கள் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த நடைப்பயண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதென தெரிவித்தார்.
மேலும் அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு சிறு மகிழ்ச்சியையும் மரியாதையையும் அளிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சொன்னார்.-Alaiolinews


மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor