Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே 23- பந்திங் வட்டாரத்தில் தற்போது டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, இங்கு தாமான் லங்காட் முர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா மக்கள் குடியிருப்பு ப் பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை பந்திங் மருத்துவமனையில் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் செம்பாக்கா கூனிங் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற வாராந்திரக் கூட்டத் தொடரில் உமா நந்தினி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் எடிஸ் கொசுக்கள் அழிப்பதற்கான மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை குத்தகைப் பணியாளர்கள் உதவியுடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

டெங்கி காய்ச்சல் கண்ட நோயாளிகள் தாமதம் செய்யாமல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி உமா நந்தினி அலை ஒளி வாயிலாக ஆலோசனை விடுத்தார்.-Alaiolinews

மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor