Alaioli
பினாங்கு தைப்பூசத் தினத்தில் சஹாஜ யோக தியான மன்றத்தின் ஆன்மீகப் பணி.டத்தோ ஶ்ரீ கா.புலவேந்திரன்

ஆர்.ரமணி 

பினாங்கு பிப் 2-பினாங்கு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு,மலேசிய சஹாஜ யோக தியானப் பயிற்சி மன்றத்தின் சார்பில்,
மக்களுக்கான ஆன்மீக தியான வழிகாட்டி பயிற்சிகள் இவ்வாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு தைப்பூசத் தினத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த ஆன்மீகப் பணிகள்,இந்த ஆண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றது.



மலேசிய சஹாஜ யோக தியான மன்றத்தின் வட மலேசிய  ஒருங்கிணைப்பாளரான
டத்தோ ஶ்ரீ கா. புலவேந்திரன் அவர்களின் தலைமையில்,மன அமைதி, சுய முன்னேற்றம் மற்றும்
உள்ளார்ந்த ஆன்மீக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில்,இந்த தியானப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஹாஜ யோக தியான பயிற்சியாளர்களான சரவணன் சண்முகம்,தலைநகரைச் சேர்ந்த நாராயணசாமி,மற்றும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த வேலாயுதம் ஆகியோர்,சஹாஜ யோக தியானத்தின் முக்கியத்துவம்,அதன் பயன்கள் மற்றும் மன அழுத்தம் குறைப்பதில் அதன் பங்கு குறித்து அலை ஒளி ஊடகத்திடம் விளக்கமளித்தனர்.


சஹாஜ யோக தியானம் என்பது மனிதனின் உள்ளார்ந்த சக்தியை இயற்கையாக எழுப்பும் ஒரு ஆன்மீக பயிற்சி என்றும்,இதன் மூலம் மன அமைதி, கவனம் மற்றும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.மதம், இனம், மொழி என்ற எல்லைகளைத் தாண்டிஎல்லா தரப்பு மக்களும் இந்த தியானப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றும்,பினாங்கு தைப்பூசம் போன்ற புனித நாளில் இந்த ஆன்மீக சேவையை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


ஆன்மீகமும் மனிதநேயமும் ஒன்றிணையும் இந்த சஹாஜ யோக தியான சேவை,பினாங்கு தைப்பூசத் திருநாளுக்கு மேலும் ஒரு ஆன்மீக அர்த்தத்தை சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Post ImagePost Image

Leave a Comment
Trending News