Alaioli
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் சித்தம் குளிர வைக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங், ஏப்ரல் 13 - ஆண்டுகள் நகர்ந்து அடுத்தொரு புத்தாண்டு பிறந்து வரும் இந்த பிரபஞ்சத்தில், சித்தம் குளிர வைக்கும் சித்திரையெனும் முதல் மாதத்தின் இனிய பராபவ எனும் புதிய புத்தாண்டு,  நாளை (14.4.2026) செவ்வாய்க்கிழமை மலர்ந்து மணம் கமழும் வேளையில், வாழ்வில் வசந்தம் சுகந்தம் நலம் வளம் நிறைந்த ஒரு ஆண்டாக பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை தாமும்  அன்புத் துணைவியார் திருமதி மகேஸ்வரியும் கை கூப்பி வாழ்த்தையும் வணக்கத்தையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மூத்தோர் சொல்லி வைத்த வேத வாக்கை பிறக்கும் சித்திரைப் புத்தாண்டில் அனைவரும் கடைப்பிடித்து, பிளவு பிணக்குகளை விட்டொழித்து, சகோதரத்துவம் சமத்துவம் ஒருமைப்பாடு என்ற மனித நேய பண்புகளுடன் இனிய நாளை வரவேற்று நாம் களிப்புடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தெரிவித்தார்.



சித்திரைப் புத்தாண்டு மலரும் இந்த இனிய வேளையில், மாநில அரசு செயலகத்தில் தம்மோடு பணியாற்றி வரும் இந்திய சகோதர சகோதரிகளுக்கும், பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தில் சேவையில் இருந்து வரும் அனைவருக்கும், மாநில அளவில், மாநில அரசின் தொடர்புடைய பணியாளர்களும், மக்களுக்கும்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாப்பா ராய்டு தமது சித்திரைப் புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News