Alaioli
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்

எஸ்.எஸ்.மணிமாறன்  

ஷா ஆலம், ஏப்ரல் 15-  சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்கள்  அனைவருக்கும், மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தமது நெஞ்சம் நிறைந்த வைசாக்கி சீக்கிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 


சித்திரை மாதத்தைத் தொடக்கி வைத்த பிராபவ தமிழ்ப் புத்தாண்டை த் தொடர்ந்து பிறந்து வரும் சீக்கியர்களின் வைசாக்கிப் புத்தாண்டில் மடானி அரசின் கொள்கைபடி மத நல்லிணக்கம் சகோதரத்துவம் சமத்துவம் ஒருமைப்பாடு என்ற மனித நேய பண்புகளை விதைத்து தங்களது புத்தாண்டை நேர்த்தியாகக் கொண்டாடி அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


வரும் 19. 4.2026 ஞாயிறு அன்று மாலையில் மாநில அரசின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற விருப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சீக்கிய வம்சாவளியினர் படைப்புகளான கலை கலாச்சாரம் பண்பாடு பங்ரா போன்ற நடனங்கள் ஆடல் பாடல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் கலை விழாவில் இடம் பெறும்  அதே வேளையில் சீக்கிய இனத்தை பெருமைப்படுத்தும் ஒரு  நிகழ்ச்சியாக இது அமையப் பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.-Alaiolinews

Leave a Comment
Trending News