Alaioli
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை

எஸ்.எஸ்.மணிமாறன்



பந்திங், ஏப்ரல் 21 -  இங்கு, பந்திங் வட்டாரத்தில் அமைந்துள்ள தாமான் அமான் மக்கள் குடியிருப்புப் பகுதியில் உடைந்த நிலையில் மோசமான தோற்றத்தைக் கொண்டிருந்த கால்வாய்கள் பிரச்சினையால் மழைக் காலங்களில் சேதமுற்ற கால்வாய்களால் நீரோட்டம் தடைப்பட்டு வெள்ளப் பெருக்கால் மக்கள் அவதிபட்டு வருவதை அறிந்த கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல் உடனடியாக களத்தில் இறங்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தியதால் கால்வாய்கள் உடைப்பட்ட பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட்டுள்ளதாக  அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மக்கள் மத்தியில் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்கள் மேற்கொண்ட இடைவிடாத நடவடிக்கைகளால் தாமான் அமான் ஜாலான் கெம்போஜா 6 பகுதியில் உடைந்த கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு, புல் மண்டி கிடந்த இடங்களில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு லோரிகள் மூலம் சேகரித்த அனைத்து குப்பைகளும் அப்புறப் படுத்தப் பட்டதாக சாம்சன் அலை ஒளியிடம் கூறினார்.



தமக்கு வழங்கப்பட்ட பகுதி வேறு இடமாக இருந்த போதிலும், தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட தாமான் அமான் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நகராண்மைக் கழக அலுவலக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணப் பட்டதாக சாம்சன் தெரிவித்தார்.- Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News