Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 21- நாட்டில் தற்போது மக்கள் மத்தியில் சிலர் எழுப்பப்பட்டு வரும் பிரச்சினையான பள்ளி மாணவர்கள் கழிப்பறையை,சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலம் என்ற கருத்தை த் தொட்டு தாம் அதற்கான தெளிவான விளக்கத்தை முன் வைப்பதாக சமூக ஆர்வலரும் கோலலங்காட் மாவட்ட தமிழ் மாணவர்கள் நல இயக்கத்தின் தலைவருமான பரம் சிவா தமது விளக்கத்தை அலை ஒளி செய்தியாளரிடம் முன் வைத்தார்.
என் தந்தை சிவா என்ற சிவப்பிரான், 1950 களில் ஒரு தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்றார். அந்தக் காலத்தில், பள்ளியில் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து வகுப்பறைகளைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும், பள்ளிச் சுற்றுப் புறங்களில் புல் பூண்டு செடி கொடிகள் வளர்ந்திருந்தால் அவற்றை வெட்டித் தூய்மைப்படுத்துவதும் தங்களது பணியாகக் கருதி செயல்பட்டனர்.

அதே வேளையில், புறப்பாட நடவடிக்கையாக பள்ளியைச் சுற்றி அமைந்த காலி இடங்களில் மண் வெட்டிக் கொண்டு ஆசிரியர்கள் வழிகாட்டலில் மண்ணைக் கொத்திக் கிளறி காய்கறிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
அன்றைய கால கட்டத்தில் நவீன கழிப்பறைகள் இல்லாத போதிலும் பள்ளி ஆசிரியரும் மாணவரும் இணைந்து கூட்டுப் பணி நடவடிக்கையாக இரண்டொரு கழிப்பறைகளைக் கழுவி சுத்தம் செய்து வந்துள்ளனர்.
இந்தத்தகவலை தற்போது ஆரோக்கியம் குறைந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஓய்வாக இருந்து வரும் தமது தந்தை சிவா சொல்லக் கேட்டு அதை அலை ஒளியிடம் தாம் குறிப்பிட்டதாக பரம் சிவா தெரிவித்தார்.
இன்றைய சூழலில், பள்ளி மாணவர்கள் கழிப்பறைகளைக் கழுவுவது கேவலம் என்று சமூகம் நினைத்தால் , பொது சுத்தம் அறிய முடியாத மாணவர்கள் வளர்ந்து வரும் அவர்தம் பிள்ளைகள் தத்தம் வீடுகளிலும் இதே கொள்கையை கடைப் பிடித்து தங்களது சொந்த சுத்தம் சுகாதாரத்தையும் கூட அறிந்து கொள்ள முடியாத மனிதர்களாக பின்னர் இந்த உலகத்தில் மக்கள் மத்தியில் நடமாட வேண்டி வரும் என்பதை சமூகச் சிந்தனையாளர்கள் சற்றே சிந்தித்து அறியா மக்களுக்கு உணர்த்தி செயலாற்ற வேண்டும் என்று தாம் அன்புடன் கேட்டுக் கொள்வதாக பரம்சிவா தமது மனம் திறந்த கருத்தை இங்கு வெளியிட்டார். - Alaiolinews
ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus