Alaioli
சுகாதார நலத்திட்டங்கள் மக்களை சென்றடையச் செய்வோம் ; சட்ட மன்றத்தில் பதிலளித்தார் டத்தோ சிவநேசன்..!

டிகே.மூர்த்தி

ஈப்போ, ஏப்ரல் 15-பேரா மாநில சுகாதார இலாகா மற்றும் சுகாதார அமைச்சகம் மூலம்  மனநலம் மற்றும் மருத்துவ அதிகாரிகள் எண்ணிக்கைக்கு தீர்வு காணப்படுகிறது. மனநலம் குறித்த பாதிக்கப்பட்டவர்கள்  குணம் அடைய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல மருத்துவர்கள் மொத்தம் 39 பேர் உள்ளனர்.


அவர்களில்,  தஞ்சோங் ரம்புத்தான் உலுகிந்தா மனநல அரசு மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் உள்ளிட்ட நிலையில் மொத்தம் 14 மருத்துவர்கள் உள்ளனர். ஈப்போ அரசு (HRPB) மருத்துவமனையில் 8 பேர் உள்ளனர். (3) தைப்பிங் அரசு மருத்துவமனையில் 6 பேர் உள்ளனர். 




தெலுக் இந்தான் அரசு மருத்துவமனையில்  4 பேர் உள்ளனர். மஞ்சோங் அரசு மருத்துவமனையில் 4 பேர் உள்ளனர். சிலிம் ரிவர் அரசு மருத்துவமனையில் 3 பேர் உள்ளனர் என்றும் இன்று நடைபெற்ற பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரைப் பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முகமது சித்திரை மாதத்  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தக் கூட்டத்தில், பேராவில் தேவையான மனநல மருத்துவர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை அதிகரிக்க மாநில அரசு, சுகாதார அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதா? என்று எதிர்கட்சி சேர்ந்த (PN) கம்போங் காஜா சட்டமன்ற உறுப்பினர் ZAFARULAZHAN BINZAN கேட்டிருந்த கேள்விக்கு சுகாதாரத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் பதிலளித்தார்.  


மனநலம் மற்றும் நிலைத்தன்மையற்ற உணர்ச்சி ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் மாநில சுகாதார இலாகாவின் பணியாளர்கள், ஒரு முதுகெலும்பாக விளங்குகின்றனர்.


மனநலம் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மேலும், மனநலம் எப்போதும் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதாகவும், பல்வேறு விரிவான உளவியல் சமூக ஆதரவுத் திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மலேசிய சுகாதார அமைச்சகத்தின் இணைப்பு மருத்துவமனைகளில், மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அடையக்கூடிய அதிகபட்ச எண்ணிகையைப் பெறுவதற்காக, நாங்கள் சுகாதார அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடியும் வருகின்றோம். 


மலேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2025 தரவுப்படி, மலேசியாவில் ஒவ்வொரு 1000 மக்கள் தொகைக்கு 403 பேர் மருத்துவர்கள் உள்ளனர்.


பேராவில் ஒவ்வொரு 1000 மக்கள் தொகைக்கு 466 மருத்துவர்கள் உள்ளனர். அதன்படி, மேலும் விரிவான தரவுகளின்படி மலேசியாவும்-சிங்கப்பூரும் பட்டியிலில் முதலிடத்தில்  உள்ளன.


இந்த ஒப்பிட்டளவில் அண்டை நாடுகளில் உள்ள விகிதாச்சரம் பின்வருமாறு:- (1) Indonesia-1 : 1400 /  (2) Singapura- 1 : 350 /  (3) Filipina- 1 : 1250 /  (4) Thailand- 1 : 900 /  (5) Vietnam- 1 : 700 (6) Myanmar- 1 : 1250 / என்றும் டத்தோ சிவநேசன் மேற்கோள்காட்டினார்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News