Alaioli
வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு 200 ரிங்கிட் மதிப்புள்ள உடைகள் ஹரிராயா பரிசு;  சாம்சன் தகவல்.


 எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 8.   மோரிப் சட்ட மன்றத் தொகுதியில் வசித்து வரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் 200 ரிங்கிட் மதிப்புள்ள ஹரிராயா நோன்புப் பெருநாளுக்கான ஆடைகளை இங்கு, ஹரி ஹரி ஜவுளியகத்தில் அவர்களே தேர்வு செய்து அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டனர் என்று கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பொறியியலாளர் இஸாம் ஹஷிம், மோரிப் சட்ட மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் கோலலங்காட் அமானா கட்சியின் தலைவருமான துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் ஆகியோருடன் நானும் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நேற்று இரவு ஹரிராயா பரிசாக 100 பேருக்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்து நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக அவர் கூறினார்.


நெருங்கி வரும் நோன்புப் பெருநாள் நேரத்தில் மக்கள் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி சிக்கனம் சேமிப்பை க் கடைப் பிடிக்கும்படி இஸாம் ஹஷிம் தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார். புரோகிராம் ஜோம் ஷோப்பிங் அடிப்படையில் இந்த அன்பளிப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றதாக சாம்சன் அலை ஒளியிடம் தெரிவித்தார். கோலலங்காட் நகராண்மைக்கழக உறுப்பினர்கள், மோரிப் வட்டார கிராமத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News