Alaioli
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க கிளம்பிய கும்பல் : முறியடிப்பதில் உள்துறை அமைச்சருக்கு சவாலா..? கேள்வி கேட்கும் சுங்கை சிப்புட்  நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன்..!

டிகே.மூர்த்தி, சுங்கை சிப்புட், மார்ச் 10-

(நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ். கேசவனின் “அலை ஒளி” ஊடகச் செய்தி) 

பொது அமைதி, சமூக ஒற்றுமை மற்றும் தேசியக் கோட்பாடு (PRINSIP RUKUN MEGARA) மற்றும் மத நல்லிணக்கத்தில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் உண்டாக்கிவரும் கும்பலின் தீய நோக்கத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தின் சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  உதாரணமாக தனிநபர் கூட்டமொன்று ரவாங்கில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் நாட்டின் ஒற்றுமைக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலா? என்றும் சுங்கை சிப்புட் (PH) நாடாளுமன்ற  உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் செய்தியாளர்களின் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். 


நாட்டின் முன்னேற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் இடமளிக்காத இந்த கும்பலை சட்ட ரீதியாக  கண்டிக்க-தண்டிக்க சட்டம் இல்லை என்றால் உள்துறை அமைச்சர் (DATUK SERI SAIFUDDIN NASUTION ISMAIL) அதனை மக்கள் நலனுக்காக தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நாட்டு மக்கள் ஒற்றுமையில்தான் நாட்டின் இறையாண்மை வளர்ச்சியும் உள்ளடக்கியுள்ளது என்ற முதன்மைக் காரணத்தினால் மாமன்னர் ஒற்றுமை அரசுதான் நாட்டுக்கு உகுந்தது என்ற  கட்டளைக்குகேற்ப பக்காத்தான்  ஹராப்பன ஆட்சி அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 


அந்நிலையில், ஆலய உடைப்பு சம்பவம் என்பது அத்துமீறிய செயலாகும். ஆலய நில விவகாரம் என்பது பெரும்பாலும் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக தலையிடுவதில் சட்டப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் கூட்டத்தினால், ஆலயத்தை  தரைமட்டமாக்கி வரும் நபர்களை உள்நாட்டு சமய பாதுகப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு நடத்தப்பட்டால், குறிப்பிட்ட விவகாரம் நீதிமன்றம் செல்லும்போது, ஆலய விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், பொது வெளியில் மற்றும் “டிக் டோக்” குறித்த பேசுவது தவிர்க்கப்படலாம் என்று சுட்டினார் கேசவன். 


அதன்படி, ஆலய விவகாரத்தில் உள்துறை அமைச்சர் தொடர்ந்து மௌனமாக இருக்க நேரிடும்போது, ஒற்றுமை அரசாங்கத்தைப் பலவீனமாக்கும் முயற்சியில் அந்த விஷமத்தனம் கொண்டுள்ள அக்கூட்டத்தினருக்கு பலம் சேரும். அதனால் அவர்களை  முளையிலே கிள்ளியெறியாவிட்டால், அவர்கள் துணிச்சலுடன் ஆலய உடைப்பு விவகாரத்தில் முன்னெடுத்து வரமாட்டனர் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆலயம் என்ற போர்வையில், நாட்டின் எதிர்காலத்தையும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் ஆலயம் குறித்த எதிர்ப்புகளைத்  தூண்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே, நாடு-மக்கள்-முன்னேற்றம் என்பதனைக் கருத்தில் கொண்டு சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கட்டாயமாகும் என்றார்.

Leave a Comment
Trending News