Alaioli
உலு யாம் சாலை நடுவே விழுந்து கிடந்த மரக் கிளையை அப்புறப்படுத்திய பாப்பா ராய்டு வின் மனித நேய சேவை

எஸ்.எஸ்.மணிமாறன் 

கோலகுபு பாரு, ஏப்ரல் 13-  நேற்று காலையில், களும்பாங் ஸ்ரீ டாமாய் ரிசோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான நியமனம் பெற்ற இந்தியர் சமூகத் தலைவர்கள் பங்கேற்ற இன்டக்ஸி பயிற்சிப்பட்டறையைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கோலகுபு பாருவில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜாலான் உலுயாம் வழியாக பயணித்து கொண்டிருந்தார்.



அவ்வேளையில், இடை வழியில் சாலை நடுவே முறிந்து விழுந்து கிடந்த மரக் கிளை மற்றும் அதன் முறிந்து கிடந்த உடைந்து கிடந்த பகுதிகளை தமது அலுவலக உதவியாளர்கள் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தி தூரத்தில் கொண்டு சேர்த்து மனித நேய சேவையை ஆற்றியதாக அலை ஒளி செய்தியாளர் தொடர்பு கொண்ட போது மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


உலு யாம் சாலை நடுவே மிகப் பெரிய மரக் கிளை முறிந்து விழுந்து கிடந்த நிலையில், அவற்றை நிச்சயம் ஒருவர்  அப்புறப்படுத்தி அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.



அதன் அடிப்படையில், சாலை நடுவே விழுந்திருந்த மரக் கிளையைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேய செயல் இல்லை என்பதால், போகும் வழியில் நேரத்தை சற்றே ஒதுக்கி தம்முடன் பயணித்த அலுவலக அதிகாரிகளுடன் முறிந்து கிடந்த மரக் கிளையை சாலை ஓரத்தில் கொண்டு வைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், தூய்மை படுத்தியதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். 


பந்திங் சட்ட மன்ற உறுப்பினரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான பாப்பா ராய்டுவின் மனித நேய சேவையை அலை ஒளி ஊடகம் மனம் திறந்து பாராட்டுகிறது.- Alaiolinews


Post ImagePost Image

Leave a Comment