Alaioli
கோலாலம்பூர் டேவான் பண்டாராயா மண்டப வாடகை முன்கட்டணத் தொகை வரும் மே முதல் நாளில் இருந்து குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வரும்! ஹன்னா இயோ தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - கோலாலம்பூர் டேவான் பண்டாராயா மண்டப வாடகை  முன்கட்டணத் தொகை வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் புவான் ஹன்னா இயோ இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


சுற்றுலா வருகையாளர் ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், வரும் 2027 வரை இந்த அறிவிப்பு நீடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொன்செர்ட் போன்ற உள்நாட்டு மேடை கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் மண்டபத்திற்கான கட்டணம் தளர்வு செய்யப்பட்டு வாடகை முன்கட்டணம் 10 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து 4 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறைக்கப் படுவதாக ஹன்னா இயோ தெளிவு படுத்தினார்.

அதே வேளையில், வெளிநாட்டு மேடை கலை நிகழ்ச்சிகளுக்கு வழக்கம் போல் 10 ஆயிரம் ரிங்கிட் வாடகை முன்கட்டணம் நிலைப் படுத்தப்படும் என்றும் ஹன்னா இயோ செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.- Alaiolinews

Leave a Comment