Alaioli
கே.கே.ஆர்.தேவி
ஜொகூர், ஏப்.23 - வரவிருக்கும் 16வது பொதுத் தேர்தல், மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் சக்தி கட்சி தனது அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 2026/2027 புதிய நிர்வாக அமைப்பை அறிவிக்கும் பின்னணியில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி தேசிய முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை கட்சித் தலைவர் டத்துக் ஸ்ரீ ஆர்.எஸ். தெந்தீரன் தொடங்கி வைத்தார். அதில் ஜொகூர் மாநில இளைஞர் தலைவராக நிரோஷ் நாதன் பொறுப்பேற்றதற்கும், முன்னாள் இளைஞர் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் மாநில துணைத் தலைவர் பொறுப்புடன் மாநில தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதாக தகவல் பிரிவு தலைவர் என். சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக “ஹரிமாவ் செலாத்தான்” குறியீடு ஜேம்ஸ் செல்வநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த அடையாளம், கட்சியின் போராட்ட மனப்பான்மை, மக்களுக்கான பொறுப்பு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது என அவர் விளக்கினார்.
இந்த ஒப்படைப்பு, சமூக நலனுக்காக செயல்படும் பொறுப்பை மீண்டும் உறுதி செய்யும் தருணமாக அமைந்துள்ளது என கட்சியின் துணைத் தலைவர், ஜொகூர் மாநிலத் தலைவர் டத்தோ சுகுமாரன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

“ஹரிமாவ் செலாத்தான்” அடையாளத்தை முன்னிறுத்தி, கட்சி மீண்டும் எழுச்சி பெற்று மக்களின் குரலை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தேர்தல் தயாரிப்பைத் தாண்டி, மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இயக்கமாகும் என அவர் கூறினார்.
ஒழுங்கு, கட்டுப்பாடு, உறுதியான செயல்பாடு ஆகிய அடிப்படைகளில் மக்கள் சக்தி கட்சி தனது பயணத்தை தொடர்கிறது. தனிநபர் நலனை விட மக்களின் நலனே முன்னிலையாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார். - Alaiolinews

ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்