Alaioli
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம்,  ஏப்ரல் 23 - சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில்  0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


அதே வேளையில், வறுமைக் கோட்டில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு செயலகத்தின் வாயிலாக 3.90 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னெடுத்து உதவிநிதி வழ்கியதோடு, 25 சதவீதம் கேடி என் கே மலேசியா அடிப்படையில் மக்களுக்கான உதவிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


இங்கு நடைபெற்ற, ஷோ கேஸ் ரஞ்சாங்கான் சிலாங்கூர் பெர்தாமா (ஆர் எஸ் -1) நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.


மாநில அரசு மேற் கொண்டு வரும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை வாயிலாக ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வரும் மனித நேய உதவிகள் தொடர்வதால் வறுமைச்சுமைகள் படிப்படியாக குறைந்து மாநிலம் எங்கும் மக்கள் மத்தியில் மலர்ச்சியை,  வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்று பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தெரிவித்தார்.- Alaiolinews 

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News