Alaioli
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!

டிகே.மூர்த்தி

பீடோர், ஏப்ரல் 23- தற்போதைய எண்ணெய் விலை சமாளிக்கவும் ஒற்றுமை அரசாங்கம் முனைப்புக் காட்டிவருகிறது. வரும் ஜூன் மாதம் வரை பெட்ரோல் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். 


இது குறித்த “அலை ஒளி” ஊடகத்தினர் பேரா மாநில ஆட்சிகுழு உறுப்பினரும், மனிதவள இலாகாவுக்கு தலைமை வகிக்கும் டத்தோ சிவநேசன் அச்சலிங்கத்திடம் கருத்துகள் சேகரித்தது.


அப்போது அவர் பேசுகையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதல்கள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வந்தபோதும், மலேசியாவின் எரிசக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்றும் டத்தோ சிவநேசன் சுட்டினார். 


பேரா மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் இந்திய சமூக நல வளர்ச்சி மற்றும் இஸ்லாம் அல்லாதார் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ள அவர், இந்திய சமூகத்தின் நலனில் தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும், மாறி வரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சமூகத்தினர் வாழ்க்கை செலவினத்தைக் கருத்தில் கொண்டு சிக்கனத்தின் மூலம் மாற்றியமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது என டத்தோ சிவநேசன் எடுத்துரைத்தார்.  


மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், பேரா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ சரானி முகமது தலைமை இந்திய சமூகத்தையும் அரவணைத்துச் செல்வதற்கு, ஆட்சிக்குழுவில் முன்வைக்கும் ஆலயம், தமிழ்ப்பள்ளி, ஊராட்சி மன்ற கடைகள், மயானம் குறித்த தேவைகளுக்கு மந்திரி பெசாரும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் ஒரே மனதுடன் என் பேரில் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக வற்றாத ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதால், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உடனடியாகவும் சமூகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.  


மேலும், பேரா அரசு சமுதாயத்தையும் மற்றும் இந்திய சமூதாயத்தின் வளர்ந்து வரும் இளையோர் சமுதாயத்தையும் நிர்வகிப்பதிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக மிளிர்கிறது. அந்நிலையில், பேரா மாநிலத்தில் இளையோர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறிட வாய்ப்பு இல்லை. தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் மிகப்பெரிய புரோட்டன் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. 


இதன் மூலம் நம் இளைஞர்களும் டிவெட் தொழிற் கல்வித்திறன் பயிற்சியைப் பெறுவதை அலட்சியமாகக் கருதக்கூடாது. டிவெட் என்பது குறுகியக் காலப்பயிற்சி. பயற்சிப் பெற்றவர்கள் அதிக வருமானம் பெறுவதற்கு ஒரு தடையும் கிடையாது. இளைஞர்கள் தங்களையும், தங்களைச் சார்ந்துள்ள பெற்றோர்களுக்கும் ஒளிமையமான எதிர்காலத்திற்கு ஒரு தூணாக இருக்க முடியும்.


அதே வேளையில் தீயப் பாதைக்குச் செல்லாமல் இருப்பதற்கான டிவெட் தொழிற்திறன் பயிற்சி உங்களுக்கு கலங்கரை விளக்கமாகவும், வெற்றி என்ற கரையில் சேர்ப்பித்து வருகிறது என்றார் சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன்.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News