Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங். ஏப்ரல் 23. வசதி குறைந்த மக்களுக்கு சேவை செய்வதும் அவர்கள் தேவைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்து கொடுப்பதும் மகளிர் ஆற்றி வரும் பொதுநலப் பணியாக தாம் கருதுவதால், வரும் 26.4.2026 ஞாயிறன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை இங்கு தெலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருக்கும் வட்டார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த வர்களுக்காக புரோகிராம் வணித்தா மென்டுனியா எனும் தலைப்பில் சமூகநல நிகழ்ச்சி நடைபெற விருப்பதாக மகளிர் அணித் தலைவி உமா நந்தனி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அன்றைய தினம் காலையில் மகளிர் தன்முனைப்பு உரையாடல், அரோபிக், அதைத் தொடர்ந்து வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பங்குல் மாக்கான் உணவுப் பொருட்கள் வழங்குதல், இலவச காய்கறிகள் வழங்குதல், மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு ஆகியவை நிகழ்ச்சியில் இடம் பெற விருக்கும் முக்கிய அங்கங்கள் என்று கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினருமான உமா நந்தனி அலை ஒளியிடம் கூறினார்.
பங்குல் மாக்கான் உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப் படுவதால் இவ்வட்டாரத்தில் வசித்து வரும் இந்திய ஏழைக் குடும்பத்தினர் விரைவாக வந்து பெற்றுக் கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். மகளிர் நலப் பணிகளை மக்கள் நலம் கருதி தாம் முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்