Alaioli
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில்  மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங்.  மலர்ந்திருக்கும் சித்திரை மாதத்தில் , சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் வரும் 1.5.2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இங்கு, பந்திங் நகரை யொட்டி எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான தாமான் செரி புத்ரா  அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இருக்கும் கலாசார மண்டபத்தில் சித்திரைப் புத்தாண்டுக் கலை விழா கொண்டாட்டம் தமிழரின் கலை, கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் போன்ற அம்சங்களுடன் நேர்த்தியாக நடைபெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் கலை விழாவில் இடம் பெறும் என்று அவர் அலை ஒளியிடம் கூறினார்.  பந்திங் மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் நிறைவான ஒத்துழைப்புடன், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நல்லாசியுடன் மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறும் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.

Leave a Comment
Trending News