Alaioli
பீடோர் தகான் தோட்டம் – தைப்பூசத் திருவிழா

ஆர்.ரமணி 

பீடோர் பிப் 2-பீடோர் தகான் தோட்டத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று 
தைப்பூசத் திருநாள் விழா,
மிகுந்த பக்தி, ஆன்மீக உற்சாகம் மற்றும் ஒற்றுமையுடன்
இனிதே சிறப்பாக நடைபெற்றது.


இந்த தைப்பூசத் திருவிழாவில்,
சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,500 பொதுமக்கள்
பக்தியுடன் கலந்து கொண்டதாக
ஆலய தலைவர் திரு. பி. குனசீலன் அவர்கள் தெரிவித்தார்.


விழாவிற்கு சிறப்பு வருகையாளராக,
மாண்புமிகு பேராக் மாநில ஆட்சி குழு உறுப்பினர் தலைவர்,
மனித வளம், சுகாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும்
தேசிய இந்தியர்களின் நலப்பிரிவு தலைவர்
டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தார்.


இதனிடையே,
ஆலயத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக
டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் அவர்கள்
ரிங்கிட் 25,000 (RM25,000)
நன்கொடையாக வழங்கினார்.


இந்த நன்கொடைக்கு,
ஆலய நிர்வாகம் மற்றும் பக்த கோடிகளின் சார்பில்
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக
ஆலய புரவலர் டத்தோ சுபாஸ்கரன் அவர்கள்
அலை ஒளி ஊடகத்துக்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News