Alaioli
ஆலய  விவகாரங்களில்  மூன்றாம் தரப்பு தலையிடுவதை நிறுத்திகொள்ளவேண்டும் !அர்விந்த் அப்பளசாமி வலியுறுத்து!!

சிவாலெனின்

ஈப்போ,மார்ச்08: ஆலய நில விவகாரங்களில்  மூன்றாம் தரப்பினர் தலையிடவேண்டாம் என்று துணைப் பிரமர் டத்தோஸ்ரீ அமாட் சையிடின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி வேண்டுகோள்  விடுத்துள்ளார்.


நாட்டில் உள்ள பல ஆலயங்கள நில விவகாரங்களை எதிர்நோக்கியுள்ளது புதிய கதை அல்ல அதற்கு  ஆலய நிர்வாகங்கள் மக்கள்  பிரதிநிதிகளுன் இணைந்து அந்தந்த மாநில அரசாங்கம மற்றும் நில அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையாக நடத்தி வருகிறார்கள். அதற்கு தீர்வுக்கான  நடவடிக்கை எடுத்துவரப்படுகிறதுஇதற்கிடையில் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கும் ஆலயங்களை உடைக்கு வலியுறுத்தி போராடுவது மூன்றாம் தரப்பினர்களின் செயல் ஒற்றுமையை சீர்குலைக்க வகை செய்யும் என்று எச்சரித்தார்.


ஆலய நில விவகாரங்களை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உள்ளனர் . அது தனி் நபர்களுடைய பணியில்லை.இந்த நாட்டில் பல சமயத்தவர்கள் ஒற்றுமையுடன்  வாழ்ந்த வருகிறார்கள். அந்த ஒற்றுமைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாக குறிப்பிட்டார்.நாட்டில் உள்ள  சமய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அதன் சமய வளர்ச்சிக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கி ஆதரவாக உள்ளது. இதற்கிடையில் சமுக ஒற்றுமையை சீர் குலைக்க ஒரு சிலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.


சிலர் இந்து சமயத்தை இழிவுபடுத்தி  ஆலயங்களில் அத்துமீறி நுழைந்து உடைத்து நாசமாக்குவது சமுக ஒற்றுமையை சீர்குலைக்கும்.ஆகவே ஆலய விவகாரங்களில் மூன்றாம் தரப்பினர் தலையிடுவதை நிறுத்திவிட்டு அதன் நடவடிக்கையை அதன் அதிகாரிகளின் கவனத்திற்கு விட்டுவிடவேண்டும் என்று அர்விந்த் அப்பளசாமி கேட்டுக்கொண்டார்.


இன்று( 7-3-26) பிற்பகலில் ஈப்போ , புந்தோங்கில் உள்ள ஸ்ரீ மஹா மதுரை வீரன் சுவாமி  ஆலயத்தின் 14 ஆண்டு வருடாந்திர திருவிழாவில் கலந்துக்கொண்டப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார்.இன்று நாட்டில் உள்ள பல ஆலயங்களில் இளைஞர்களால் வழி நடத்தப்பட்டு வருகிறது.சிறப்பாகவும் வழி நடத்தி வருவதையும் நினைவுக் கூர்ந்த அவர் இளைஞர்கள் சமய ஈடுபாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதையும் பாராட்டினார்.


அந்த வகையில் புந்தோங்கில் உள்ள ஸ்ரீ மஹா மதுரை வீரன் சுவாமி ஆலயத்தை இளைஞர்கள்  சிறப்பான முறையில் வழி் நடத்தி வருவதையும் சுட்டிக் காட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் பேரா மாநில ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ராமசாமி மற்றும் தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News