Alaioli
தாமான் நேசா பெண்களின் முயற்சி: நூற்றுக்கணக்கான புபுர் லம்புக் தயாரித்து சமூகத்துடன் பகிர்வு

கோகி கருணாநிதி

ஸ்கூடாய், மார்.10 – உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தாமான் நேசா பகுதியிலுள்ள ருகுன் தெத்தாங்கா (KRT) பெண்கள் குழு “Sentuhan Kasih Wanita Taman Nesa” என்ற நிகழ்ச்சியை நடத்தி, பொதுவாக ஆண்கள் மேற்கொள்ளும் புபுர் லம்புக் தயாரிப்பை பெண்களும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிரூபித்தனர்.


அதிகாலையிலேயே ஒன்றுகூடிய பெண்கள் உறுப்பினர்கள் பாரம்பரிய முறையில் நூற்றுக்கணக்கான புபுர் லம்புக் தயாரித்து, அவற்றை ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல் தலைமையகம், கெம்பாஸ் ஹாஸ்பிட்டல் பெர்மை மற்றும் தாமான் உங்க்கு துன் அமினா (TUTA) ரமலான் பஜார் ஆகிய இடங்களில் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சி பெண்களின் திறன், ஒற்றுமை மற்றும் சமூக சேவையை வெளிப்படுத்தும் முயற்சியாக அமைந்ததாக தாமான் நேசா காவல் சமூகத் தலைவர் மற்றும் KRT தலைவர் கோகிலாவாணி சுப்பிரமணியம் தெரிவித்தார். பெண்கள் தயாரித்த புபுர் லம்புக் வழங்கப்பட்டபோது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டதுடன், அதன் தரத்தையும் பாராட்டியதாகவும் கூறப்பட்டது.


மேலும் காவல் தலைமையகம் மற்றும் ஹாஸ்பிட்டல் பெர்மை ஊழியர்களும் இந்த முயற்சியை வரவேற்று, சமூகத்திடமிருந்து கிடைத்த இந்த அன்பளிப்பு தங்களுக்கு ஊக்கமாக அமைந்ததாக தெரிவித்தனர். இந்த முயற்சி எதிர்காலத்தில் பெண்கள் சமூக நடவடிக்கைகளில் மேலும் முன்வர ஊக்கமளிக்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News