Alaioli
வீட்டுவசதி மேம்பாட்டு சங்கத்தின் சீனப் புத்தாண்டு விருந்தோம்பலில் முதல்வருடன் முக்கியப் பிரமுகர்கள் ஒருசேர பங்கேற்பு!

பினாங்கு மார்ச் 11-பினாங்கு நில உடமைகள் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு சங்கத்தின் (REHDA) ஏற்பாட்டில் இங்கிருக்கும் கர்னி பே நட்சத்திர விடுதியில்  நிகழ்ந்த சீனப் புத்தாண்டு விருந்தோம்பலில் மாநில முதல்வர் சௌ கொன் இயாவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள  கலந்து கொண்டனர்.


மாநில மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் உள்பட அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த விருந்தோம்பலில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், மாநில உள்ளாட்சி மற்றும் நகரப் பெருந்திட்டத்துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய் பிரதான பிரமுகராக வருகையளித்திருந்தார்.


இந்த விருந்தோம்பலின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான டத்தோ கூ தெக் சோங் தனது செயலவையினருடன் இணைந்து அனைவரையும் வரவேற்று உபசரித்த வேளையில், பினாங்கின் பற்பல மேம்பாட்டுப் பணிகளை மேர்கொள்வதில் தமது சங்கத்துடன் மாநிலத் தலைவர்கள் பலர் அணுக்கமான நல்லுறவை வளர்த்துக் கொண்டிருப்பதாகவும் தனது மனநிறைவை வெளிப்படுத்தினார்.


மாநில அரசாங்கத்துடன் நீண்டகால பரஸ்பர ஒத்துழைப்பை நல்கி வரும் REHDA, இந்த விவகாரத்தில் மாநிலதரப்பினர்கள் யாவருக்கும் தனது  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதோடு,நிலையான நகர்ப்புற வளர்ச்சியை வடிவமைப்பதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு  முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.


இத்தகைய நட்புறை விருந்தோம்பல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் மூலம் மேம்பாட்டு வளர்ச்சிகளுக்கான புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறுமென்றும் கூறிய அவர், பினாங்கு  ஒரு துடிப்பான, நிலையான மற்றும் பாதுகாப்பாக வாழக் கூடிய மாநிலமாக தொடர்ந்து நீடித்திருப்பதை உறுதி செய்ய  முடியுமென்றும்  அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Post ImagePost Image

Leave a Comment
Trending News