Alaioli
புக்கிட் ஜங்காங் கிராமத்தில் நோன்புத் துறப்போருக்கான பூபோர் கச்சாங் தயாரிப்பு =கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி பங்கேற்பு

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங் மார்ச் 11.  இங்கு, பந்திங் நகருக்கு அருகில் இருக்கும் புக்கிட் ஜங்காங் கிராமத்தில் நோன்பு நோற்போருக்கான பூபோர் கச்சாங் தயாரிப்பில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் உமா நந்தினி ஞானப்பிரகாசம் பங்கேற்றார் .


நகராண்மைக் கழகம் தமக்கு வழங்கப்பட்ட ஷோன் 12  கிராமங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், கிராமத் தலைவர் தோக் அலியாஸ் ஹமிடி வேண்டுகோளின்படி  அவரது நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பணி நடவடிக்கையில் பூபோர் கச்சாங் கஞ்சி தயாரித்து நோன்பு நோற்ற ஆயிரம் பேருக்கு தாம் நெகிழிப் டப்பாக்களில் ஊற்றி வழங்கியதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


கூட்டுப்பணி நடவடிக்கையில் அனைவரும் கை கொடுத்து உதவியதாக உமா நந்தினி அலை ஒளியிடம் கூறினார். விரைவில் வரவிருக்கும் ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நடவடிக்கையில் தாம் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார். நோன்பு என்பது ரமலான் மாதத்தில் முக்கிய கடமையாகக் கடைப் பிடிக்கப் பட்டு வருவதால், நோன்பு அனுசரித்து வரும் முஸ்லீம் அன்பர்களுக்கு ஆரோக்கியமான பூபோர் கச்சாங் தயாரிப்பில் தாம் பங்கேற்று அனைவருக்கும் ஹரிதாஸ் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக உமா நந்தினி கூறினார் .

Post ImagePost Image

Leave a Comment
Trending News