Alaioli
உரிமம் இன்றி சட்ட விரோதமாக நடத்தி வந்த காஃப்பேத்தெரியாவுக்கு அமலாக்கப் பிரிவினர் சீல் வைப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம்  மார்ச்  11 இங்கு, ஜாலான் கெலாமா 17/24, செக் ஷன் 17 இல் உரிமம் இன்றி நீண்ட காலமாக சட்ட விரோதமாக வழி நடத்தி வந்த காஃப்பேதெரியா மையத்தை ஷா ஆலம் பண்டாராயா அமலாக்க அதிகாரிகள் சீல் வைத்ததுடன் தொடர் விசாரணைக்காக அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றதாக துணை இயக்குநர் துவான் ஜக்காரியா மாட் பியா அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


அதே வேளையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கையின் போது, துணை அமலாக்கப் பிரிவு அதிகாரி முகமட் இம்ரான் அமாட், போலீஸ் காவல் துறையைச் சேர்ந்த ஏசிபி முகமட் ரிஷிப் ஹமாஸின்,முகமட் ஹாஷிம் ஹூசேன்,   மற்றும் ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தின் 6 உதவிக் காவல் துறையினர் களத்தில் இறங்கி பொருட்களைப் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.


2007 ஆம் ஆண்டின் ஷா ஆலம் பண்டாராயா சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக ஜக்காரியா மாட் பியா அலை ஒளியிடம் கூறினார். எந்த வித அனுமதியும் உரிமமும் பெறாமல் காஃப்பேதெரியா உணவு மையத்தை வழி நடத்தி வந்தவர்களுக்கு எச்சரிக்கை,அபராதக் கடிதங்கள் சார்வு செய்யப் பட்டதோடு அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம் என்று ஜக்கரியா தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News