Alaioli
 பினாங்கு ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சாலையின் சாக்கடைப் புழை உடனடி சரிபார்ப்பு!

பினாங்கு மார்ச் 11-பினாங்கு ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சாலையிலுள்ள சாக்கடைப் புழையில் ஏற்பட்ட திடீர் பழுதினால் இதன்பாதிப்பு வாகனமோட்டிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, மாநகர் மன்ற மேயர் த.விஸ்வநாதன் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் அப்புழையின் பழுதுக்கு  உடனடி நிவர்த்தி காணப்பட்டது.


சம்பந்தப்பட்ட சாக்கடைப் புழையின் மூடியில் ஏற்பட்டிருந்த சேதத்தினால் நாளாக நாளாக அது விலகி விட்ட நிலையில், வாகனமோட்டிகள் அவ்விடத்தை மிகவும் கவனமாகக் கடந்து செல்ல வேண்டியச் சூழல் உருவெடுத்த வேளையில், சிறுகவனக் குறைவு ஏற்பட்டாலும் விபத்து நிகழக் கூடிய பீதியும் உருவெடுத்திருந்தது.


இதனால் அசம்பாவிதங்கள் நிகழக் கூடிய பாதக நிலைமை இங்கு தலை தூக்கியிருந்த விவாகாரத்தை அறிந்த விஸ்வநாதன், இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களை நிகழ்விடத்திற்கு வரவழைத்து, புழையின் மூடிய உரிய முறையில் மூடுவதற்கான நடவடிக்கையில் தானும் இணைந்து களமிறங்கினார்.


இந்த விவகாரத்தில் மாநகர் மன்ற தரப்பு ஊழியர்களின் பங்களிப்பு விரைவில் கிட்டியதாகவும் இதற்கு மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரனின் உடனடி உத்தரவு ரிய நேரத்தில் பெறப்பட்டதால், இந்த பழுது பார்ப்பு நடவடிக்கை உடனடி மேற்கொள்ளபட்டு பாதக நிலைமைக்கு உகந்த பரிகாரம் காணப்பட்டதாகவும் விஸ்வநாதன் அகம் நெகிழ்ந்தார்.

Post Image

Leave a Comment
Trending News