Alaioli
அலை ஒளி சமூக ஊடகத்தின் பேரா மாநில அரசின் சிறப்புச் செய்தி
டிகே.மூர்த்தி,
ஈப்போ, மார்ச் 11-ரமலான் மாதம் நோன்பு இன்றோடு 20 நாள்கள் நிறைவடையும் நாளை சந்தித்துள்ள பேரா மாநில (Pusat Aspirasi) மாநில மைந்தர்கள் (PASAK) சார்பில் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறித்த மாநில சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நிகழ்வில் சிறப்பு வருகை அளித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் செய்தியாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வானது நோன்பு திறப்பது மட்டுமின்றி, மாறாக நம் அனைவருக்கும் இடையிலான உறவுகளை மலேசியர் என்னும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய தலமாக (Pusat Aspirasi) செயல்படுகிறது. நம்மைப் பொறுத்தவரை இன மற்றும் மதம் அடிப்படையிலான பின்னணியைப் பொருட்படுத்தாமல், நாம் அனைவரும் இங்குள்ள மேசைகளில் அமர்ந்திருக்கும் நிலையில், இது மலேசியர்களின் தனித்துவத்தை நிரூபித்துள்ளது.
இதுவே ரமலானின் உண்மையான ஒளி. மேலும், நம்மை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் ஒளியாகும். குறிப்பாக ஊடக நண்பர்களுக்கு, நீங்களே தேச சமூகத்தின் கண்களாகவும், காதுகளாகவும் மற்றும் குரல்களாகவும் முக்கியமான ஒரு மூலோபாய பங்காளிகளாகவும் இருக்கின்றீர்கள் என்பதை மறுக்க முடியாது. அந்நிலையில், அரசாங்க கொள்கைகள் மற்றும் நாட்டு மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்த நேர்மறையான தகவல்களை திட்டவட்டமாக பரப்புவதிலும், அரசினால் முன்னெடுக்கப்படும் சலுகைகளை மக்கள் பெறுவதிலும் அதில் ஒரு குடி மகனும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதனை உறுதி செய்வதிலும் முதன்மைப் பங்காக இருத்தல் அவசியம் என்றார் அவர்.
எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பு இந்த இணக்கமான (Sinergi Harmoni) நட்பு தொடர்ந்து-செழித்து எதிர்காலத்தில் வலுப்பெற வேண்டும் என்று இந்த வேளையில் பிரார்த்திக்கிறேன். மேலும், ஊடக அன்பர்களுக்கும் (PASAK) அமைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருடைய தியாகமும், ஆதரவும், கூட்டுமுயற்சியும் இருந்தால் மட்டுமே (Perak Sejahtera 2030) அரசு எதிர்பார்க்கும் பலனை பேரா மாநிலம் அடையும் என்பதை மீண்டுமொருமுறை நினைவுப்படுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன் என டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் சுட்டினார்.
கோலாலம்பூர்
Ronald Kiandee digantung keahlian Bersatu selama dua penggal
புத்ராஜெயா
MP BANGI desak tindakan tegas terhadap individu hina simbol agama Hindu
பினாங்கு
Kerajaan Pulau Pinang Guna Pendekatan Tersusun Selesai Isu RIBI
பினாங்கு
வீட்டுவசதி மேம்பாட்டு சங்கத்தின் சீனப் புத்தாண்டு விருந்தோம்பலில் முதல்வருடன் முக்கியப் பிரமுகர்கள் ஒருசேர பங்கேற்பு!
ஜொகூர்
தாமான் நேசா பெண்களின் முயற்சி: நூற்றுக்கணக்கான புபுர் லம்புக் தயாரித்து சமூகத்துடன் பகிர்வு
ஜொகூர் பாரு
பந்தாட்டத்தை தாண்டி ஜொகூரின் எதிர்காலத்தை நோக்கும்தி திஎம்ஜெ – மந்திரி பெசார்.
ஷா ஆலம்
உரிமம் இன்றி சட்ட விரோதமாக நடத்தி வந்த காஃப்பேத்தெரியாவுக்கு அமலாக்கப் பிரிவினர் சீல் வைப்பு.
பந்திங்
புக்கிட் ஜங்காங் கிராமத்தில் நோன்புத் துறப்போருக்கான பூபோர் கச்சாங் தயாரிப்பு =கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் உமா நந்தினி பங்கேற்பு