Alaioli
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை 650 பேர் பெற்றனர்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 8.   பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் இங்கு இன்று காலையில் எக்கோன் சேவ் பேரங்காடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட 200 ரிங்கிட் மதிப்புள்ள ஹரிராயா நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை  650 பேர் பெற்றுக் கொண்ட பின்னர் பேரங்காடியில் தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டதாக பற்றுச்சீட்டுகளை விநியோகித்த அதன் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமானின் துணைவியார் திருமதி மகேஸ்வரி, பற்றுச் சீட்டுகள் பெற்றவர்களுக்கு பேரங்காடியில் தேவையான உணவுப் பொருட்களை எடுத்து வழங்கி உதவினார். 


தகுதிப் பெற்ற அதே வேளையில், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹரிராயா நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம் செய்யப் பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்களின் துணைவியர்கள் வழி நடத்தி வரும் பெகாவானிஸ் அமைப்பின் உறுப்பினருமான திருமதி மகேஸ்வரி மேற் கண்ட கருத்தை அலை ஒளியிடம் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில், பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உதவி அதிகாரிகள், பந்திங் இந்திய சமூகத் தலைவர் சாமிதுரை, யூபேன் துணை இயக்குநர் புவான் ரஹாயு அலி, மற்றும் கிராமத் தலைவர்கள், கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News