Alaioli
கோல சிலாங்கூர் அங்காளபரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் 10 ஆயிரம் பேர் திரண்டனர்.

எஸ்.எஸ்.மணிமாறன். 

கோல சிலாங்கூர் மார்ச் 8.  கோல சிலாங்கூர்  ரிவர் சைட் தோட்டம் ஏ பிரிவில், எழுந்தருளியுள்ள 126 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து தங்களது வேண்டுதல் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி, அங்காள பரமேஸ்வரி பிரமாண்ட சிலைக்கு குங்குமம் சந்தனம் சுற்றிலும் தெளித்து நெய் விளக்கு ஏற்றி வைத்து அர்ச்சனை செய்து வழி பட்டனர்.


பினாங்கு, பேராக், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாவட்டங்களில் இருந்து  14 பேருந்துகளில் பயணம் செய்து வந்து சேர்ந்த பக்தர்கள்,  அம்பாளை வழிபட்டு, மகேஸ்வரப் பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான உபசரிப்பிலும் பங்கேற்றதாக ஆலயத் தலைவர் குருநாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். அதே வேளையில், களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க வந்திருந்த அலை ஒளி செய்தியாளர் எஸ்.எஸ்.மணிமாறன், அம்பாள் சிலைக்கு குங்குமம் சந்தனம் தூவி தங்கள் செய்தி நிறுவனம் தொடர்ந்து தழைத்து செழித்து சிறக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து வேண்டிக் கொண்டார்.


அலை ஒளி ஊடகச் செய்திகளை ஆர்வத்துடன் கண்ணோட்டமிட்டு வாசித்து வரும் அதன் ஆர்வலர்கள் சுரேஷ் குமார், டர்ஷன் சுரேஷ் தங்களது வேண்டுதலை முன் வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கியதைத் தொடர்ந்து ஆலய அர்ச்சகர் வெங்கட் சிறப்பு அர்ச்சனை செய்து வழங்கிய காளாஞ்சியை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டனர்.


தொலை தூரத்தில் இருந்து நேர்த்திக் கடனை நிறைவேற்ற வந்தவர்களுக்கு பகலில் சுட்டெரிக்கும் கடும் வெயிலின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ள ஆலய வளாகத்தில் இலவச குளிர் மோர் அனைவருக்கும் வழங்கப்பட்டதாக ரேலா தொண்டூழிய பாதுகாப்பு அதிகாரி நீலாவதி அலை ஒளியிடம் கூறினார். இன்று மாலை வரை நீடித்த ஆலய மாசி மகத் திருவிழாவில் பங்கேற்ற அனுபவங்களுடன் பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு பேருந்தில் ஏறி புறப்பட்டனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News