Alaioli
எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, 2026 ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த ஜன நாயகன் திரைப்படத்தின் முதற்கட்ட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சில தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது தயாரிப்புக் குழுவிடமிருந்து மேலதிக புதுப்பிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம் என்றும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி பின்னர் உறுதிசெய்யப்பட்டவுடன் , அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தளங்களிலும் ஊடக வழிகளின் மூலம் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்காலத்தில், அனைத்து ரசிகர்களும் ஆதரவாளர்களும் பொறுமையுடனும் நேர்மறை அணுகுமுறையுடனும் இருக்குமாறும் நிறுவனம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களில் இருந்து பரவும் சரிபார்க்கப்படாத அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை பகிர்வதையோ அல்லது அவற்றில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
பல முக்கியமான ஏற்பாடுகள் இன்னும் நடைபெற்று வருவதால், இந்த விவகாரத்தில் அனைவரின் புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம் என மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றுமையுடனும் அமைதியுடனும் இருந்து, ஒரு நேர்மறையான தீர்வை எதிர்பார்த்து காத்திருப்போம் எனவும் அவர்கள் கூறினர்.
இறுதியாக, இதுவரை இரசிகர்கள் வழங்கி வரும் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நிறுவனம் தமது மனப்பூர்வமான நன்றிதனைத் தெரிவித்துள்ளது.
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்