Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 20 - பந்திங் வட்டாரத்தில் நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நாயன்மார் பெருவிழாவில் மக்கள் குடியிருப்பு ப்பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தலைநகரில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த சைவத் திருக்கோயில் கலை, கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நாயன்மார்கள் சிறப்புகள் பற்றி தமது பக்தி உரையில் குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலங்களுக்கு இறைவனை தரிசிக்க வருவோர் எத்தகைய நிலையில் உடையில் கவனம் செலுத்தி இறைவனை வேண்டி அருள் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
செந்தோசா சைவ சமய மன்றம், சிலாங்கூர் சைவ சமய மன்றம், நீலாய் சைவ சமய மன்றம் மற்றும் ஸ்ரீ மஞ்சா சைவ சமய
மன்றம் ஆகிய சமய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்த மெய்யன்பர்கள் அனைவரும் மண்டபத்தில் மதிய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டனர்.- Alaiolinews




ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்