Alaioli
by ச.குமரா
மும்பாய்,ஏப்ரல் 12- இந்திய சினிமா இசை உலகில் முக்கியமாக பாலிவுட்டில் நைட்டிங்கெலாக அரைநூற்றாண்டுக்கும் மேல் உலா வந்த பாடகி ஆஷா போஸ்லே இன்று காலமானார்.
அவரது இந்த திடீர் மரணம் இந்திய இசை உலகை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நெஞ்சில் கிருமி தொற்று காரணமாக அவர் நேற்று சனிக்கிழமை மாலை மும்பையிலுள்ள பிரிச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டது.
ஆயினும் இன்று அவர் காலமானதாக சிகிச்சை வழங்கிய மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதித் சம்டானி உறுதிப்படுத்தினார்.
"அம்மையாரின் அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்ததைத் தொடர்ந்து அவர் இன்று 92 வயதில் இயற்கை எய்தினார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,"என்றார்.
இதனிடையே அம்மையாரின் புனித உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படும்.
"நாலை திங்கள் காலை 11 மணி தொடங்கி என் அன்னையின் உடலுக்கு இசைப் பிரபலங்கள்,பொது மக்கள் அனைவரும் இறுதி மரியாதையை செலுத்தலாம்," என்று அவர் உறுதிபடுத்தினார்.
தனது இசைப்பயணத்தில் இதுவரை அம்மையார் சுமார் 12,000 மேற்பட்ட பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews
கோலாலம்பூர்
சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- கோபிந்த் சிங் டியோ வாழ்த்து
சிலாங்கூர்
சிப்பாங் அனைத்துலக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் 82 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல்- டத்தோ ஷஸேலி கஹார்
சிலாங்கூர்
Sindiket dadah antarabangsa cuba seludup syabu, ganja bernilai RM5.45 juta melalui KLIA 1 tumpas
சிலாங்கூர்
12 PATI ditahan oleh APMM dalam Op Ehsan dan Op Khas Tanjung 2 di Klang
கோலாலம்பூர்
Pemandu Perodua Axia langgar lari anggota trafik berjaya dicekup
சிலாங்கூர்
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் சித்தம் குளிர வைக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பேராக்
சுங்கை சிப்புட் மக்கள் சேவை மையத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்..!
சிலாங்கூர்
உலு யாம் சாலை நடுவே விழுந்து கிடந்த மரக் கிளையை அப்புறப்படுத்திய பாப்பா ராய்டு வின் மனித நேய சேவை