Alaioli
சிப்பாங் அனைத்துலக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் 82 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல்- டத்தோ ஷஸேலி கஹார்

எஸ்.எஸ்.மணிமாறன்

சிப்பாங், ஏப்ரல் 14- இங்கு, சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் அமைந்துள்ள விற்பனை மையத்தின் அருகில் சிலாங்கூர் மாநில போதைப் பொருள் தடுப்பு த்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனை நடவடிக்கையின் போது, 5.45 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 82 கிலோ கிராம் போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததாக சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஷாஸேலி கஹார் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.



இந்த நடவடிக்கையில் போதைப் பொருட்களை கடத்திப்பதுக்கி வைத்திருந்த 19 வயது நிரம்பிய உடைகள் விற்பதாக ப் பாசாங்கு செய்த பெண்ணின் செயலைக் கண்டு பிடித்த அதிகாரிகள் கைது செய்ததுடன் தொடர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 



மேலும், அவரிடம் இருந்து 6 இலட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 12 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 12.5 கிலோ கிராம் ஷாபு வகை போதைப் பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக  போலீசார் மீட்டதாக டத்தோ ஷா ஸேலி தெரிவித்தார்.


நர்கோட்டிக் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  விசாரணை முழுமை பெற ஏதுவாக இன்னும் சிலரும் தொடர்பில் இருக்கக் கூடும் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.-Alaiolinews


Post ImagePost Image

Leave a Comment
Trending News