Alaioli
சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- கோபிந்த் சிங் டியோ வாழ்த்து

எஸ்.எஸ்.மணிமாறன்

கோலாலம்பூர், ஏப்ரல் 13-  நாளை 14.4.2026 செவ்வாய்க்கிழமை மலரவிருக்கும் பராபவ ஆண்டின் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.


மலர விருக்கும் புதிய புத்தாண்டில் மக்கள் மத்தியில் நிலவி வரும் பிளவு பிணக்கு வெறுப்பு கசப்புகளை தள்ளி வைத்து புன்னகை மலர அனைவரையும் சகோதரத்துவத்துடன் அரவணைத்து வரவேற்று ஒருமைப்பாட்டில் கால் பதித்து புதிய நம்பிக்கை செயலுடன் அனைவரும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் தமது அன்பு வேண்டுகோளை புத்தாண்டுச் சிந்தனையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.-Alaiolinews

Leave a Comment
Trending News