Alaioli
சுங்கை சிப்புட் மக்கள் சேவை மையத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்..!

டிகே.மூர்த்தி

சுங்கை சிப்புட், ஏப்ரல் 13- நாளை (14.04.2026) செவ்வாய்க்கிழமை  மலரும் சித்திரை “பராபவ” தமிழ்ப்புத்தாண்டு மன மகிழ்ச்சியினை வழங்கும் மங்கள ஆண்டாக அமைய வாழ்த்துகள் கூறுகிறோம்.


மக்களின் வாழ்வில் நிறைந்த வளம், உடல் நலம் மற்றும் ஆனந்தம் நிறையட்டும். எதிர்பார்க்கும் நல்ல விடயங்கள் ஈடேரட்டும். வெற்றிகள் மிளிரட்டும். 


இதையொட்டி சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் சுப்பிரமணியம் தொடர்ந்து கூறுகையில், தமிழ் ஆண்டுகள் என்பது அறுபது என்ற பெயர்கள் பட்டியிலிடப்பட்டுள்ளன.


அந்த வரிசையில் நாளை “பராபவ” என்னும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்த இனிய நன்னாளில் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மக்கள் சேவை மையம் சார்பில் உளங்கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.-Alaiolinews

Leave a Comment
Trending News